கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 09
தணியாப் பசியால் தவித்துத் –துணிவாய்
எழுந்ததோ பேரலை இன்னல் இழைக்கப்
பொழுது புலரும்முன் பூத்து? (81)
பூத்துக் குலுங்கும் பொழிலைப் புயற்காற்று
வீழ்த்திச் சிதைக்க விழைவதுபோல் –கூத்தொன்றை
ஆழிசூழ் பேரலை ஆங்கரங்(கு) ஏற்றியதே!
ஊழிசூழ்ந் தன்ன உயர்ந்து! (82)
பொழில் –சோலை; ஆழி –கடல்; ஊழி –அழிவுக்காலம்.
உயிர்போய்க் கிடந்த உடல்கள் அகற்றி
உயிர்த்தோர்க்(கு) உதவ உலகம் –முயன்றால்
தடுத்தவ் உதவியைத் தன்வயம் கொள்ளும்
கெடுமனம் கொண்ட குலம்! (83)
குலக்கா வலனே! குடிகள் குறையை
விலக்கத் துடித்தாய் விரைந்தே –நிலங்காக்கும்
முப்படையை ஏவி முதலுதவி செய்கென்றாய்
அப்படையும் வந்துதவிற்(று) ஆங்கு! (84)
ஆழி இழைத்த அழிவின் களையெடுத்து
மேழி பிடித்ததன் மேலுழுதாய் –பாழின்
வழிவந்த காடையர்கள் கண்டு மருண்டு
மொழியற்று நின்றார் முனிந்து! (85)
ஆழி –கடல்; மேழி –ஏரு.
முனைநாள் முதலாய் முடிவில்லாப் போரை
வினையால் விரித்தாரவ் வீணர் –புனைகதையாம்
மாகுலத்தைக் கற்று மதங்கொண்டார்; கொண்டதனால்
சாகுலத்தர் ஆனார் சரிந்து! (86)
மாகுலம் –மகாவமிசம் (சிங்களர்களின் வேதம் எனப் பீற்றப் படுகின்ற
புனைநூல்); சாகுலத்தர் –அழியும் இனத்தவர்.
சரிக்குச் சரிநின்று சாய்க்கப் பிறந்தாய்
அரிமுகத்தர்க்(கு) அச்சம் அதனால்; –விரிகற்றை
பிஞ்சோலை அன்னஇளம் பிள்ளைகளைக் கொன்றார்
செஞ்சோலை இல்லிற்குச் சென்று! (87)
சென்றெதிர்க்க நெஞ்சில் திறனில்லாக் காடையர்கள்
கொன்றொழிக்க வான்வழியே குண்டெறிந்தார் –நின்றிருக்கும்
கூரை சிதற, குடிசையுள்ளோர் செத்தொழிய
ஊரை அழித்தார் உவந்து! (88)
உவக்காண் உடலின் உறுப்பிழந்தோர் ஓலம்;
இவக்காண் இறந்தோரை என்றே –உவப்பான்
உலங்கூர்தி ஓட்டுநனும் உள்ளிருக்கும் மற்றை
விலங்கும்ஆம் என்னும் விரைந்து! (89)
விரட்டிவரும் வான்படையை வீழ்த்த விரைந்துன்
முரட்டுப் படையர் முனைந்தார் –திரட்டி
அடித்ததில் ‘‘நாயக’’ வான்தளம் வீழும்
வெடித்(து)உலங்(கு) ஊர்திபல வெந்து! (90)
--
அன்புடன்
அகரம்.அமுதா
Tags:
போர்க் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த வேண்டும்! - பாகம் 6
வன்னி சிறந்த நீர் முகாமைத்துவத்தின் பயனாய் இரு போக விளைச்சல் காணும் நிலப்பரப்பாக இருந்தது திட்டமிட்ட தாக்குதல் காரணமாக விவசாயம் படுத்துவிட்டது நன்செய் நிலங்கள் சீண்டுவாரற்றுக் கிடக்கின்றன.
வன்னி வாழ் விவசாய குடும்பங்கள் பலவற்றுடன் நெருங்கிப் பழகி உள்ளேன். வன்னியின் சுய தேவையை பூர்த்தி செய்யும் பொருளாதாரத்திற்கு இவர்கள் ஆற்றிய பணியை நன்கு அறிவேன் பெரும் பாலன விவசாயிகள் நிலத்தின் சொந்தக்காரர்களாக இருந்தனர்.
கால் நடைகளும் விவசாய உபகரணங்களும், உழவுயந்திரங்கள், நீர் இறைக்கும் பொறிகளும், சேமிப்பில் நெல்லும் பெரும்பாலான விவசாயக் குடும்பங்களிடம் இருந்தன அனைத்தையும் இவர்கள் இழந்து விட்டனர். வெறுங் கையோடு தடுப்பு முகாமிற்குச் சென்று நிவாராணம் வாங்கித் தின்கின்றனர்.
வன்னி விவசாயத்தில் பெரும் பங்கெடுத்த விவசாயத் தொழிலாளர்களும் அதே நிலையில் தான் உள்ளனர். எல்லோருக்கும் பொதுவான தலைவிதி தான் இவர்களையும் பீடித்துள்ளது. நில உரிமையாளர்களும் உயிரிழப்பையும், உடல் உறுப்பு இழப்பையும் சந்தித்துள்ளனர் தொழிலாளர்களும் அதே நிலமையில் உள்ளனர்
நீர் பாயும் விவசாயம் நிலம் குடியிருக்கும் மேட்டுக்காணி மொத்தம் 5 ஏக்கர் நிலத்தில் வாழ்ந்த மன்னார் ஈச்சலவக்கை குடும்பம் எப்படி நெடுந்தூரத்தில் இருக்கும் புதுமாத்ததளனில் வந்து உயிர்நீத்தது என்று பார்ப்போம்
மன்னார் பள்ளமடு சந்தியில் இருந்து பெரியமடு செல்லும் வீதியில் சுமார் 10 கி.மீ தொலைவில் ஈச்சலவக்கை கிராமம் இருக்கிறது கடும் செல் மழையில் அங்குவாழ முடியாத நிலையில் பாதுகாப்பான இடத்திற்குப் போவோம் என்று தீர்மானிப்பதற்கு முன் குடும்பத் தலைவன் பலியானார்
இதற்குப் பின் பலியானவரை அடக்கம் செய்து விட்டு தாயும் ஆறு பிள்ளைகளும் வீடடின் தேசமடையாத பகுதியை உற்றாரின் உதவியோடு பிடுங்கி உழவு இயந்திரத்தில் ஏற்றினார்கள். கால் நடைகளைக் கொண்டு போக முடியாத படியால் அவற்றை அவிட்டுக் காட்டு நோக்கித் துரத்தி விட்டார்கள்
வேறு மன்னார் மக்களும் உழவு இயந்திரத்திலும் மாட்டு வண்டிகளிலும் கால் நடையாகவும் கிளிநொச்சியை நோக்கிப் பயணமாகினர் அந்தப் பிராந்தியமே வெறிச்சோடியது தமிழீழ மக்களின் வேரை வெட்டி அவர்களைக் கண்காணாத இடத்திற்கு விரட்டும் சிறிலங்கா அரசின் நோக்கம் படிப்படியாக வெற்றி பெறத் தொடங்கியது.
மன்னார் மக்களின் ஒரு கணிசமான பங்கினர் கிளிநொச்சியில் சாவைச் சந்தித்தனர். யுத்தம் பற்றி எழுதுபவர்கள் எத்தனை பொது மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று கணக்கிடுவதில்லை அதைத் தவிர்க்க முடியாத இழப்பீடு என்று ஒதுக்கி விடுகிறார்கள்
யுத்தம் என்பது இரு நாட்டு படைகளுக்கு இடையில் நடக்குமே தவிர ஒரு முழு அளவு யுத்தமே நடந்து முடிந்திருக்கிறது மரபு ரீதியான போர் கருவிகளைப் பயன்படுத்தாமல் தடைசெய்த ஆயுதங்களை சிங்கள பௌத்த அரசு பயன்படுத்தியிருக்கிறது.
கொத்துக் குண்டுகள், வெள்ளை பொஸ்பரஸ் விசவாயு மற்றும் இராசாயனக் குண்டுகள் போன்றவற்றை வீசி பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை கொண்டு இருக்கிறார்கள் கெமிக்கல் ஆயுதங்களைப் பயன்படுத்திய சிறிலங்கா அரசை தட்டிக் கேட்க யாருமில்லை
கிளிநொச்சி மாவட்டத்தில் போர் உக்கிரமடைந்த வேளையில் பொது மக்களின் உயிரிழப்பைத் தடுப்பதற்காக ஒரு ஒதுக்குப் புறத்தை அரசு அவர்களுக்கு கொடுக்கும் படி போரில் ஈடுபட்ட இருசாரையும் கேட்க்கப்பட்டது. புலிகள் சம்மதித்தனர் ஆனால் அரசு உறுதியாக மறுத்துவிட்டது

இந்த மறுப்பு கபட நோக்கம் கொண்டது மக்களுக்கு உயிர் சேதத்தை ஏற்படுத்துவதோடு அவர்களை விரட்டிச் செல்ல வேண்டும் என்ற அடிப்படை தந்திரோபாயம் அரசிடமும் அதற்கு அனுசரணையாகச் செயற்பட்ட நட்பு நாடுகளுக்கும் இருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தம் சூடு பிடிக்கத் தொடங்க முன்பே தமிழீழ மக்களுக்குச் சிறிதளவு உதவி வழங்கிக் கொண்டிருந்த ஐ.நா உதவி அமைப்புக்களும் பிற வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் வெறியேறத் தொடங்கி விட்டன ஐ.நா அமைப்புக்கள் தங்கள் பாதுகாப்பிலும் வாழ்க்கைச் சுதந்திரலும் முக்கிய கவனம் எடுப்பவர்களாக உள்ளனர்.

ஐ.நா வழங்கும் நிதியின் பெரும் பகுதியை நிர்வாகச் செலவு என்ற பெயரால் தமது உணவுக்கும் தமது வாழ்விட அசௌகாரியத்திற்கும் செலவிட்டனர் இதனால் மக்கள் பெற்ற பயன் சிறிதாக இருந்தாலும் அவர்கள் இருப்பதால் தமக்கு ஒரு விதப் பாதுகாப்பு என்பதைப் பொதுமக்கள் உணர்ந்தனர். வெளியேறும்படி ஐ.நா அமைப்புக்களையும் பிற வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களையும் சிறிலங்கா அரசு நிர்ப்பந்திக்க தொடங்கியவுடன் மக்கள் தமது அவலத்தை உணர்ந்தனர்.
இந்த அமைப்புகளின் வெளியேற்றத்தை துரிதப்படுத்துவதற்காக அவற்றிற்கு மிரட்டல் விடும் வகையில் இந்த அமைப்புக்களின் நிர்வாக மைய்யங்கள், வாழ்விடங்கள், என்பவற்றிற்குச் குண்டுவீச்சுக்களை சிறிய தூரத்தில் அரச படைகள் நடத்தின மக்களோ இவர்களுடைய வெளியேற்றத்தைத் தடுப்பதற்காகச் சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பித்தனர் வெளியேற்றத்திற்கு தயார் நிலையில் இருந்த இந்த அமைப்புக்களின் வாகனத் தொடரணி செல்லும் சாலைகளின் நடுவே மக்கள் அமர்ந்து இருந்தனர்
ஐ.நா அமைப்புக்கள் இது போன்ற தடுப்புப் போராட்டங்களை வேறு நாடுகளில் சந்தித்துள்ளதால் அவற்றை முறியடிக்கும் வழி முறைகளை நன்கு அறிந்து இருந்தனர் றுவான்டாவில் நடந்த ருட்சி இன அழிப்பின் போது ஐ.நா அமைப்புக்கள் மெதுவாக நழுவிச் சென்றுள்ளனர்
நாங்கள் உங்களைக் கைவிடமாட்டோம், வெளியேறமாட்டோம் என்று உத்தரவாதம் வழங்கிய ஐ.நா அமைப்பு அதிகாரிகள் யாரும் எதிர்பாரத வேளையில் திடிரென்று வெளியேறிவிட்டனர் அவர்களுடன் பிற வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் வெளியேறி விட்டனர்.
இப்போது சாட்சியம் இல்லாத கொடிய போரை நடத்தும் பெருவாய்ப்பு அரசுக்கு ஏற்பட்டது. இந்தியத் தீவிரவாதிகளான நக்சலயிற்றுகளுக்கும் மாவோயிஸ்ருகளுக்கும் எதிராக இந்திய இராணுவத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்று இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

ஏனென்றால் உள்நாட்டில் இராணுவப் பயன்பாடு இந்திய தர்ம சாத்திரங்களுக்கும் நீதி நெறிகளுக்கும் முரணானதாம் இப்படித் தத்துவம் பேசும் இந்திய அரசு அப்பாவித் தமிழர்களுக்கு எதிரான போருக்கு இராணுவ உதவி வழங்கியதோடு மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் எழுந்த போது சிறிலங்காவுக்கு இராசதந்திரப் பாதுகாப்பும் வழங்குகிறது இது தான் சாணாக்கியம்.
சிறந்த மருத்தவ சேவை வழங்கிய எம்.எஸ்.எப் என்ற எல்லைகளால் கட்டுப்படாத உலக மருத்துவ அமைப்பின் வெளியேற்றம் தமிழீழ மக்களுக்கப் பேரிடியாக வீழ்ந்தது. சூடான் அரசு வெளியேறும்படி பணித்தும் அடிபணியாது டாபரில் மருத்துவ சேவை வழங்கிய இந்த அமைப்பு எப்படி தமிழீழ மக்களைப் பரிதவிக்க விட்டுச் சென்றது என்பது மர்மமாக உள்ளது.
எதிரும் புதிருமாக வேகமாக வரும் இரு மோட்டார் வாகனங்கள் இலகுவாக ஒன்றையொன்று விலத்திச் செல்ல முடியாத ஒடுங்கலான வன்னித் தெருக்கள் ஊடாக இத்தனை லட்சம் மக்கள் ஒரேடியாக நகர்ந்தார்கள் என்பதைக் கற்பனை பண்ணிப் பாருங்கள்.
வன்னி முழுவதிலும் 60 அல்லது 75 ஆயிரம் மக்கள் தான் வாழ்கிறார்கள் என்று கொழும்பு அரசு தவறான புள்ளி விபரங்களை உலகிற்கு வழங்கியது அரசினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கொடுத்த மக்கள் தொகைக் கணக்குகளை அரசு நிராகரித்தது உண்மையில் 3 லட்சம் மக்கள் வன்னியில் வாழ்ந்தனர்.
புலிகளின் மிரட்டலுக்குப் பயந்து இந்த அதிகாரிகள் தவறான புள்ளி விபரங்களை அறிவிக்கிறார்கள் என்று அரசு குற்றம் சுமத்தியது வன்னியில் உணவுத் தட்டுப்பாடும் பசி பட்டினியும் நிலவுவதால் அரசு உலர் உணவு நிவாரணம் வழங்குவதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஓரு சொற்ப தொகை நிவாரணம் பல மாத இடைவெளிக்கு ஒரு முறை வழங்கப்படுவது உண்மை தான் 3 லட்சம் மக்களுக்கு 60-75 மக்களுக்கு என்று வழங்கப்பட்ட உலர் உணவை எப்படிப் பங்கீடு செய்வது என்று அரச அதிகாரிகள் திணறினார்கள்.
கொழும்பில் இருந்து கப்பல் மூலம் வரும் அற்ப சொற்ப நிவாரணத்தை கப்பலில் இருந்து இறக்க விடாமல் சிறிலங்கா கடற்படை தடுத்த சந்தர்ப்பங்களும், உலர் உணவு நிவாரணம் இறக்கப்படாமலும் கப்பல் திரும்பிச் சென்ற நிகழ்சிகளும் பலவுண்டு
அரசு அனுப்பும் நிவாரணத்தை புலிகள் தமது உணவுத் தேவைக்காக எடுத்துச் செல்கிறார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டையும் அரசு முன்வைத்தது. எதிரிக்கும் உணவும் மருந்தும் வழங்கிக் கொண்டே போராடும் ஒரேயொரு அரசு என்னுடையது தான் என்று அதிபர் மகிந்த ராஜபக்ச தம்பட்டம் அடித்தார்.
கால் வயிற்றை நிரப்பும் கஞ்சி தயாரிக்க உதவும் என்ற உந்துதலால் வன்னி மக்கள் முதல் நாள் இரவே நிவாரணம் வழங்கும் இடங்களுக்கு முன்னால் குழுமி நிற்பார்கள். இவர்கள் மீது விமானக் குண்டு வீச்சும், செல் அடியும் சமகாலத்தில் நடத்தப்படுவது வழமையான நிகழ்ச்சி..
பெருமளவான உயிரிழப்பு நிவாரணம் வாங்கச் சென்ற மக்களுக்குத்தான் ஏற்பட்டுள்ளது இதை நான் நன்றாக அவதானித்துள்ளேன். இது பற்றிய விபரங்களை இதில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
– அரசியல் ஆய்வாளர் க. வீமன்
தொடரும்…

உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள்
மனித உடலினுள் கண்ணுக்குத் தெரியாமல் செயல்படுகின்ற ஏழு சக்கரங்கள், உடலிலுள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டினையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. இந்த ஏழு சக்கரங்களும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஏழு சக்கரங்களையும் அவை கட்டுப்படுத்தும் உறுப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்மூலாதாரம்
முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.
சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள்,சிறுநீர்ப்பை,முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது
ஸ்வாதிஷ்டானம்
இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே அமைந்திருக்கிறது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. பாலியல் சக்தியைக் கொடுப்பதிலும் பெறுவதிலும் இதற்கு முக்கிய பங்கு உண்டு. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை தாண்டி அறிகின்ற சக்தி இதிலிருந்து தான் கிடைக்கிறது. பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
மணிபூரகம்
சோலார் ப்ளெக்ஸஸ் என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே இது இருக்கிறது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன. கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. இரைப்பை,கல்லீரல்,பித்தப்பை,மண்ணீரல்,ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.
அனாகதம்
இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் இது இருக்கிறது. அன்பு, பாசம்,இரக்கம்,சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும்.
தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், கல்லீரல்,ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.
விசுத்தி
இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.
ஆக்ஞா சக்கரம்
இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் ( Telepathy ) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.
பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.
சகஸ்ரஹாரம்
இதற்கு தாமரைச் சக்கரம் என்ற பெயரும் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தச்சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும்,நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது. பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.
Tags:
maruthuvam