மஞ்சள் காமாலை தடுப்பது எப்படி?
கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் இந்த நோய் ஏற்பட காரணம். இந்த வைரஸ் கல்லீரலை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும்.சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் ஒருவரது உடலுக்குள் நுழைந்து விடுகிறது. இரத்தம் செலுத்தும்போது அல்லது உடலுறவின் போதுகூட இது பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஒன்று அல்லது இரண்டாவது வாரத்தில் மஞ்சள் காமாலை தோன்றுகிறது.
மஞ்சள் காமாலையை உறுதி செய்வது எப்படி?
இரத்தப் பரிசோதனையின் மூலமே மஞ்சள் காமாலை நோயை உண்டாக்கும் வைரஸ் பற்றி கண்டறிய முடியும். இந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல், புரதத்தின் அளவு இரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை அறியலாம்.
மஞ்சள் காமாலை உறுதியான பிறகு என்ன செய்ய வேண்டும்?
உடனடியாக முறையான சிகிச்சை எடுப்பதோடு பத்தியமும் இருக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை நோய் முழுமையாக குணமடையும் வரை கடைபிடிக்க வேண்டும். கல்லீரல் அழற்சி நீண்ட காலம் இருந்தால் அது கல்லீரல் புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது.
மின்னேரியா இரகசியத் தடுப்பு முகாமில் கேணல் நகுலன் படுகொலை! லங்கா நியூஸ் வெப் தகவல்



வழுக்கை விழ காரணமான மரபணு கண்டுபிடிப்பு

வயதானால் மூளைத்திறன் குறையுமா?
வயதாக வயதாக மூளைத்திறன் குறைகிறது என்று நினைக்கிறோம். வயதாகும்போது அறிவு வளர்வதற்குப் பதிலாகத் தேய்கிறது என்று பொதுவாகக் கருதப்படுகிறது.காய்கறிகளின் அவசியம்!

நாம் தமிழர் கட்சியின் மாவீரர் தின அறிக்கை...
சீமான்...
தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் - மாவீரர்நாள் அறிக்கை 2011
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
27/11/ 2011.
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்தாலன்றி தமிழீழத் தாகத்தை யாராலும் அழித்துவிட முடியாது! - தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழம்.
ஈகத்தை நெஞ்சில் நிறுத்தி சுடரேற்றி தலைதாழ்த்தி மலர்தூவ வாரீர்
இந்நாளில் நாம் எடுக்கின்ற உறுதிமொழி, களத்தில் காவியமான கதாநாயகர்களின் எண்ணங்களில் உறைந்திருந்த தமிழீழத் தாயக இலட்சியத்தை ஈடேற்றும்வகையில் ஒற்றுமையாய், ஒரணியில்திரண்டு தமிழனுக்கென்றோர் நாடு தரணியில் அமையப்பெற சத்தியம் செய்துகொள்வோம்.
நாம்வாழ, நமக்கென்றோர் நாடு அமைய, நெருப்பாய் எழுந்து தரையில், கடலில், வான்வெளியில் களமாடி சாவிலும் சரித்திரம் படைத்த மாவீரர்கள், முகம்தெரியாமல் முழுநிலவாக எங்களின் எண்ணங்களில் நிறைந்திருக்கின்ற சாதனை வீரர்கள், எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய நாட்டுப்பற்றாளர்கள், எமது போராட்டத்துக்காக குரல்கொடுத்து செயல்பட்ட மாமனிதர்கள், மற்றும் இப்போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்த மக்கள் ஆகியோரை என்றும் எம் இதயத்தில் வைத்து ஆராதிப்போம்.
தாய் நிலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் சிதைக்கப்பட்டபோதும் புலத்தில் எமதுமக்கள் ஒன்றுதிரண்டு எமது தேசிய வீரர்களை நினைவில் கொள்கின்றார்கள்.
இவர்களைப் பெற்றெடுத்த தாய்மார்கள், இவர்களின் உறவுகள் இந்நாளில் தாய்நிலத்தில் இல்லங்களிலிருந்து ஏங்குகின்றபோதும் புலத்தில் நாம் செலுத்துகின்ற வீர வணக்கம் நிலத்தில் நிம்மதியைக்கொடுக்கின்றது.
எமது தேசிய வீரர்களை என்றும் நாம் மறக்கக்கூடாது. அவர்கள் தங்களின் வாழ்வைப்பற்றி சிறிதளவேனும் சிந்திக்காது ஒட்டுமொத்த தமிழினத்தின் வாழ்வே தமது இலட்சியமென்று எதிரி படைகளை எமது மண்ணிலிருந்து விரட்டியடிக்க களமாடிய மாவீரர்கள்தான் எமது தேசிய செல்வங்களாகும்.
இவர்கள்தான் எமது வழிகாட்டிகள் என்பதையும் இந்நாளில் எமது மனங்களில் அழியாத நினைவாக வைத்துக்கொள்வோம்.
ஒன்றா, இரண்டா எண்ணற்ற வீரமறவர்கள் சிந்திய செங்குருதி, எமது மண்ணுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்குமென்ற உறுதி வீரம் செறிந்த விடுதலைப் போரில் வெளிப்பட்டது.
எங்கள் சந்ததியினரின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு எமது மண்ணில் தங்களை விதைத்தார்கள். நிச்சயம் வேரூன்றி விருட்சமாக எழுவார்கள். அப்போது எமது மக்கள் விடுதலையைப் பெறுவார்கள்.
20 ஆம், 21 ஆம் நூற்றாண்டுகளில் உலகில் நீதியான, நேர்மையான, எமது தேசிய இனத்துக்கான, வீரம்செறிந்த மாபெரும் விடுதலைப்போரை எமது தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் நடத்தியிருக்கின்றோம்.
நாம் உரிமையோடு, உலகில் தலைநிமிர்ந்து வாழ்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் சில நாடுகள் சிங்கள ஆக்கிரமிப்பளார்களுக்கு உதவி புரிந்ததின் மூலம் எமது வீர விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது.
நாம் ஓர் பழமைவாய்ந்த மொழியைப்பேசுகின்ற தேசிய இனம் என்பதை உலகமக்கள் ஏற்றுக்கொள்ளும்காலம் வரும்போது எமது மக்கள் விடுதலைபெறுவார்கள். அதற்கான செயற்பாடுகளில் புலத்தில் வாழ்கின்ற எமது மக்கள் ஒற்றுமையாக செயற்படவேண்டும்.
தமிழர்களின் வரலாற்றில் சோழர்காலம் பொற்காலமாக கருதப்பட்டது. அதற்குப் பிறகு புலிகளின் காலமே பொற்காலமாகும். தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம் என்றும் இதனை குறிப்பிடமுடியும்.
உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் நாம்தமிழர் , நமது மொழி தமிழ், நமது நாடு தமிழீழம், நமது தேசியகொடி புலிக்கொடி, நமது தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் என்பவை தொடந்தும் எமது சந்ததியினரின் மனதில் ஆழமாக பதியப்படவேண்டும்.
அப்போதுதான் எம்மால் உறுதியாக விடுதலையைப் பெறமுடியும். புலத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும் சொல்லிலும், செயலிலும் எமது நாடு தமிழீழம் என்பதை ஏனைய இனத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.
சுயநலத்திற்கு அப்பால் தமிழ் மக்களின் உரிமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் அர்ப்பணிப்போடு செயலாற்றி ஒவ்வொரு மாவீரரின் நினைவில் அழியாத ஓவியமாக பதிந்துள்ள தமிழீழ நாட்டின் வரைபடம் உலகப்படத்தில் இடம்பெறவும், உலக அரங்கில் எமது தேசியக்கொடியான புலிக்கொடி பட்டொளி வீசிப்பறக்கவும், தொடர்ச்சியாக எமது மக்களின் குரல் ஒவ்வொரு நாடுகளிலும் ஓங்கி ஒலிக்கவேண்டும்.
எமது விடுதலைப் போராட்டத்தை விழுதுகள்போல் தாங்கிநின்ற மக்கள் , மாவீரர்களை ஈன்றெடுத்த பெற்றோர்கள், எமது வீரர்களோடு உறவாடி உதவிகள் புரிந்து விடுதலையை நேசித்தவர்கள் இன்னும் எமது மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
புலத்தில் வாழ்கின்ற மக்களை நோக்கிய வண்ணம் காத்திருக்கின்றார்கள். இவ்வாறானவர்களுக்கு உதவி புரிவது எமது கடமைகளில் ஒன்று என்பதை எப்போதும் நாம் மறக்கக்கூடாது. இதனை திடமாக இந்நாளில் புரிந்து கொள்வோம்.
மாவீரர்களின் நினைவுகளை சுமந்து அவர்களின் எண்ணங்களுக்கேற்ற விதத்தில் உலக மக்களோடு ஒன்று கூடி எமது உரிமையை பெற்றுக்கொள்வோம்
எழுகதிர்
paramathevaranjan@yahoo.com

தப்பிச் சென்ற புலிகளை இலக்குவைக்கும் சிறீலங்கா.
suthanraj@gmail.com
‘இம்முறை வந்திருப்பது விருந்தாளிகளாக அல்ல’ - இராணுவமும் யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையும்!
முட்புதர்களிடையே ஒளிந்திருக்கும் நிலக்கண்ணி வெடிகள் குறைந்தபட்சம் ஒரு பனங்காயாவது தனது உடலின் மீது விழும்வரை காத்திருக்கின்றன. நாற்புறத்திலும் கேட்கும் சிங்களக் குரல்கள் ‘இம்முறை வந்திருப்பது விருந்தாளிகளாகவல்ல. நிரந்தரமாகத் தங்குவதற்கே’ எனக் கத்திச் சொல்கின்றன. ‘மனிதாபிமான நடவடிக்கை’யின் பின்னணியில் வந்திருக்கும் வியாபார நிறுவனங்கள், வாழ்க்கைப் போராட்டமானது இன்னும் முடிவுக்குவரவில்லையெனக் கூறியபடி வேலைவாய்ப்புகளோடு காத்திருக்கின்றன. இது யுத்த காலத்துக்குப் பிறகு வவுனியாவுக்கு அடுத்தபடியாக இருக்கும் உலகத்தின் இன்றைய நிலைமையாகும்.
தொழிலொன்றைச் செய்தல், உணவு பானங்களைத் தயாரித்தல், வீடுகளைக் கட்டுதல், மகிழ்வாக இருத்தல், வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளல் போன்ற இன்னும் மக்களிடையே மறைந்துவிடாத அனைத்தும் சாதாரணமாகப் பொதுமக்கள் சமூகமொன்றுக்குள் மனிதர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த நடவடிக்கைகளாகும். யுத்தத்தின் காரணமாக மேற்சொன்ன நடவடிக்கைகளுக்குத் தொடர்ச்சியான தடங்கல்கள் ஏற்படுவதே பொதுமக்கள் சமூகத்துக்குத் தலைவலியாக அமைகிறது. இன்னுமொரு புறத்தில் ஏதேனுமொரு குழுவினரது வாழ்க்கை முறைகளுக்கு நடைமுறையிலிருக்கும் அரசியல் நிலைமையானது ,தடங்கலாக அமைவதற்கு எதிராகத்தான் யுத்தமொன்று உருவாகிறது.
யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரைப் போலவே, யுத்தகாலத்திலும்கூட வவுனியாவைத் தாண்டிய உலகத்தின் மீது சுமத்தப்பட்ட தடங்கல்கள் காரணமாக மனித உயிர்களைத் தியாகம்செய்ய நேர்ந்தது. இன்று யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. எனினும் யுத்தம் முடிவுற்ற பிற்பாடு மீள அளிக்கப்படும் எனச் சொல்லப்பட்ட பொதுமக்களது வாழ்க்கையானது, வவுனியாவைத் தாண்டிய உலகுக்கு மீள அளிக்கப்பட்டிருக்கிறதா என்பதே கேள்வியாக உள்ளது. காட்சிப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கொஞ்சம் ஒதுக்கிப் பார்க்கும்போது, அவ்வாறான அமைதியான வாழ்க்கையொன்று அங்குத் தென்படுவதில்லை. வவுனியாவைத் தாண்டிய மக்களது வாழ்க்கை எதிர்பார்த்த இடத்தை விடவும் மிகவும் கீழேயே இன்றும் உள்ளதென்பதை இலங்கையை முன்மாதிரியாகப் பார்ப்பவர்களிடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
ஏ9 வீதியில் அமைந்திருக்கும் அனேகமான உணவகங்களில் மரக்கறி ரொட்டிகளைத் தயாரிப்பதும் தேநீர் தயாரிப்பதும் இராணுவத்தினராலேயே நடைபெறுகின்றன. மிகவும் ஒழுங்கான முறையில், தூய்மையாக (இராணுவ ஒழுங்குகளுக்கு அமைய நடாத்தப்பட்டுவரும் இந்த உணவகங்களின் உரிமையாளர்கள் வேறு யாருமல்ல. பாதுகாப்பு அமைச்சுதான். இவ்வாறு இராணுவத்தால் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது யுத்தத்தின் பிறகு மக்களுக்கு மீள அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட பொதுமக்களது வாழ்க்கையும் அவர்களது வாழ்வாதாரங்களும்தான்.
அநுராதபுரம் ஸ்ரீ மஹாபோதியை வணங்கச் செல்கையில் பிரபாகரனைக் கொன்ற இடத்தையும் பார்த்துவிட்டு வரவென இப்பொழுதும் வரிசையாகச் சென்றுகொண்டிருக்கும் தெற்கின் மக்களால் இந்த உணவகங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. பாதுகாப்பு அமைச்சானது, இந்த வருமானத்தின் மூலம் இம்மக்களை அச்சுறுத்தவெனவே இன்னுமின்னும் ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. இல்லாவிடில் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சேமிக்கிறது. யுத்தத்தின் பிறகு ஏ9 வீதியோரத்தில் கடையொன்றை நிறுவிக்கொள்ளக் கனவுகண்ட மனிதன் இராணுவ உணவகமொன்றில் சிங்களத் தேநீரைச் சுவைத்துவிட்டு வீடு செல்கிறான்.
இராணுவமானது மாலை நான்கு மணி தாண்டியதன் பிறகு விளையாடத் தொடங்குகிறது. மைதானங்களில் விளையாடப் பந்துகளை எடுக்கிறது. ஏ9 வீதியில் சைக்கிள்களில் ஓடுகிறது. எனினும் விளையாடக்கூடிய சாதாரண இளைஞர், யுவதிகளைக் காண முடியவில்லை. ஒன்று, விளையாடியவர்கள் இன்னும் அகதி முகாம்களில் இருக்கக்கூடும். இல்லாவிடில் வீட்டைவிட்டும் வெளியே வராதிருக்கக்கூடும்.
அனுராதபுரம், மாத்தறை அவிஸ்ஸாவெல்லையைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் (இராணுவப் படையினர்) ஓமந்தை மைதானங்களில் பந்து விளையாடுகையில் ஓமந்தை இளைஞர், யுவதிகள் அகதிமுகாம்களுக்குள்ளோ வீடுகளுக்குள்ளோ அடங்கியிருக்கக்கூடும். ஓமந்தைக் கொண்டாட்டங்கள் இராணுவத்தால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சந்திக்குச் சந்தி நிறுவப்பட்டிருக்கும் புத்தர் சிலைகள், பௌத்த விகாரைகள் நாம் மாங்குளத்தில் இருக்கும்போதும் மகரகமயில் இருப்பது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றன. இராணுவமானது, மதத்தைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறது. இவ்வாறு அடிக்கொன்றாக நிறுவப்பட்டிருக்கும் பௌத்தக் குறியீடுகளின் காரணமாகத் தாம் வேற்று மனிதர்கள் என்றே மக்களுக்குத் தோன்றுகிறது. இப்புத்தர் சிலைகளுக்குப் பக்கத்திலேயே ‘ஒரே இனம் ஒரே நாடு’ என ஆங்கிலத்திலும் தமிழிலும் விசாலமான விளம்பரக் கட்அவுட்கள் நிறுவப்பட்டுள்ளன. சிலவேளை, இராணுவமானது ‘ஒரே இனம் ஒரே நாடு’ என்பதில் சிங்களப் பௌத்தர்களை மட்டுமே காண்பதாக இருக்கக்கூடும். ஆகவே இவ்வாறு தெற்கிலிருந்து சென்றுள்ள இராணுவமானது வவுனியாவைத் தாண்டி இன்னுமொரு தெற்கை உருவாக்குகையில் அப்பிரதேசத்து மக்களின் வாழ்க்கையைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
இன்று வவுனியாவைத் தாண்டியுள்ள மக்களின் வாழ்க்கை எவ்வாறாயினும் அப்பிரதேசங்களில் இன்னுமொரு தெற்கு உருவாக்கப்பட்டுக்கொண்டிருப்பது மட்டும் தெளிவானது. இராணுவத்தின் தெற்கு மனிதர்கள் வடக்கில் மரக்கறி ரொட்டிகளைத் தயாரிக்கையில், பந்து விளையாடுகையில், புத்தரை வணங்குகையில் அப்பிரதேசத்து மக்கள் ‘வாய்ச் சொல் தவறினால் மரணம்’ என்பதை நன்கு அறிந்திருப்பதால் அமைதியாக இருக்கின்றனர். தெற்கின் கலாசாரங்கள் எந்தளவு வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றதெனில் இன்று தெற்கின் குளியல் இடங்களிலும் கூரைகளிலும் பதுங்கியிருக்கும் ‘கிறீஸ் பூதங்கள்’கூட வடக்குக்கும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
வவுனியாவைத் தாண்டியுள்ள மக்களின் வாழ்வாதாரங்கள், சந்தோஷங்கள், சமயம் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் இப்போது இராணுவத்தால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதோடு இன்று உண்மையில் வடக்கில் பொதுமக்களது வாழ்க்கையை வாழ்வது இராணுவத்தினர் மட்டுமே. சாதாரண வாழ்க்கையொன்றைக் கனவுகண்ட மக்கள் யுத்தகாலத்தைப் போலவே இப்பொழுதும் தமது வாழ்க்கையைத் தியாகம் செய்தபடியிருக்கிறார்கள்.
இங்குக் காணப்படும் முக்கிய அம்சமானது தெற்கின் வாழ்க்கையை வடக்கில் கழிப்பதற்காக அரசாங்கத்தால் இராணுவத்துக்கு ஊதியம் வழங்கப்படுவதாகும். ஆகவே இராணுவமானது அந்த ஊதியத்தைப் பெற்றுக்கொள்ள இன்னுமின்னும் கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய வேண்டும். பந்து விளையாட வேண்டும், புத்தர் சிலைகளை நிறுவ வேண்டும், கிறீஸைப் பூசிக்கொள்ள வேண்டும்.
கெரபொத்தா
விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் வாழ்க்கையில் சிங்கள இராணுவத்தின் தலையீடுகள் – அல்ஜசீரா காணொளி வெளியீடு
ஆனால் இலங்கையின் சமூகங்கள் முன்பைவிடவும் மேலும் பிரிவினையாகியிருப்பது போலத் தோன்றுவதால் இன்னொரு பிரச்சினை தோன்றக் கூடிய அபாயம் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் விடுதலைப் புலிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளியேறி தமது வீடுகளுக்குத் திரும்புகையில் தமது வாழ்க்கையில் இராணுவத்தின் நுழைவு இன்னமும் தொடர்ந்திருப்பதைக் காண்கின்றார்கள் என அல்ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
இதேவேளை போர்க்குற்றங்களை விசாரணை செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்குக்கு கிடையாது என கூறுபவர்களால் போரின் இறுதிக்கால கட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கான அறிக்கையைச் சமர்ப்பிக்க அதிகாரம் கிடையாதென விமர்சிக்கப்பட்டும் வருகின்றது.
இந்த அறிக்கை நேற்று ஆணைக்குழுவின் தலைவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் ‘இலங்கை இணைகின்றது’ போன்ற குழுக்கள் நாட்டிற்கு நல்லதொரு எதிர்காலம் உள்ளதென்றே பார்க்கின்றனர்.
இந்த இளையோர் அமைப்பு இலங்கை முழுவதும் பயணித்து இனக்குழுக்களிடையே ஒற்றுமையையும் சமாதானத்தையும் தூண்டும் நகர்வுகளைச் செய்துவருகின்றன.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் அனேகமானவர்கள் விடுதலை செய்யப்பட்டள்ளனர் என அரசு தெரிவித்து வருகிறது. அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு சுமூகமானதொரு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அல்ஜசீரா, முன்னாள் விடுதலைப் புலிகளின் வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடுகள் தொடர்பிலான காணொளி ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளது. அக் காணொளி இங்க பகிரப்பட்டுள்ளது.
இலங்கை போரிற்குப் பின்னதான கசப்பான இனப் பிரிவினையை மாற்ற என்ன தான் வழி ?
ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள்! முக்கிய அம்சங்களை பகிரங்கப்படுத்தியது ஆங்கில பத்திரிகை
பலமான ஆயுதங்கள் தரித்த தீவிரவாதக் குழுவின் பிடியில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் கேட்டிருக்க வேண்டியதில்லை. அவ்வாறு போர் நடவடிக்கையை நிறுத்துவது தீவிரவாதிகள் மூர்க்கம் பெறுவதற்கு மட்டுமே வழிவகுக்கும்.
அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் பொதுமக்கள் வேண்டுமென்றே தாக்கப்படுவதை தடைசெய்கின்றது.
ஆனால் ஒரு அரசாங்கம் பணயக்கைதிகளை மீட்கின்ற போர் நடவடிக்கையின் போது அதைக் கடைபிடிக்க முடியாது என்றும் நல்லிணக்க ஆணைக்குழு கூறியுள்ளது.
போர் நடவடிக்கையை நிறுத்துவது அல்லது தற்காலிகமாக இடைநிறுத்துவது பிரச்சினைகளை மோசமாக்கவே செய்யும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி பல்வேறு சந்தர்ப்பங்களில், போரின் இறுதிக்கட்டங்களில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டதாக கூறிய பிரதான குற்றச்சாட்டுக்கே ஆணைக்குழு இவ்வாறு பதிலளித்துள்ளது.
388 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை தொழில்நுட்ப மற்றும் வரைபடத் தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது.
காணாமற் போனோர் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்த பலர், குறிப்பாக வடக்கு,கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
படையினரால் கைதுசெய்யப்பட்டு காணமற் போனவர்கள் தொடர்பாக, அவர்களின் அன்புக்குரியவர்களின் சாட்சியங்களை புறக்கணிக்கக் கூடாது. காணாமற் போன நடவடிக்கைளில் அரசாங்கத்தின் தொடர்பு இல்லை என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது.
ஆகக்கூடிய பாதுகாப்புடன் கடும்போக்குள்ள தீவிரவாத சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூசா தடுப்பு முகாமுக்கு சென்றிருந்த தமது உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை பாதுகாப்புப் படையினரோ காவல்துறையினரோ இல்லாத சூழ்நிலையில் சந்திக்க முடிந்ததாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ளோர் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட வேண்டும் அல்லது விரைவான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எல்லா சமூகத்தினருக்கும் சமமான உரிமைகளும், முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும்.
வடக்கு உள்ளிட்ட நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள ஒரு நிலத்தையும் யாரும் வாங்கக் கூடிய நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். வடபகுதியில் உள்ள நிலங்களை வேறு பகுதியைச் சேர்ந்த யாராவது வாங்க முடியாது என்ற சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும்.
ஆயுதக்களைவுக்கு நியாயபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அண்மையில் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொல்லப்பட்ட சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும்.
ஆணைக்குழுவின் அமர்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது உதயன் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டவிரோதமான எல்லா ஆயுதங்களையும் களைவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பல மாதங்களுக்கு முன்னர் கையளித்த இடைக்கால அறிக்கையின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று, மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையை மும்மொழி நாடாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள இந்த அறிக்கையில், ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக பயன்படுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நோர்வேயின் நடுநிலையுடன் கூடிய போர்நிறுத்த உடன்பாடு உள்ளிட்ட, பிரச்சினைகளுக்கு காரணமான போருக்கு முந்திய மற்றும் பிந்திய பல்வேறு செயற்பாடுகள் குறித்தும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு சாராத தரப்புகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த போர்நிறுத்த உடன்பாட்டை ஒரு முன்மாதிரியாக கொள்ள முடியாது என்றும் கூறியுள்ள அறிக்கையில், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் அவசர அவசரமாக இந்த உடன்பாட்டைச் செய்து கொண்டதற்காக இலங்கை அரசாங்கத்தை ஆணைக்குழு விமர்சித்துள்ளது.
டக்ளஸ் தேவானந்தா ஆணைக்குழு முன் சாட்சியமளித்த போது, போருக்கு முந்திய மற்றும் பிந்திய சூழலில் அவரது குழுவினருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களையே அளித்துள்ளார் என்றும் கூறியுள்ளது.
விடுதலைப் புலிகளின் பின்புலத்துடன் சனல்-4 வெளியிட்ட சிறிலங்காவின் கொலைக்களங்கள் காணொலி முற்றிலும் போலியானது. உலகின் பல்வேறு இடங்களிலும் காண்பிக்கப்பட்ட இந்தக் காணொலியின் உண்மைத்தன்மையை அறிய தாம் நாசா நிபுணர் ஒருவரின் ஆலோசனையை நாடியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவசர அவசரமாக சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் மீது ஆணைக்குழு குறை கூறியுள்ளது. தேசிய பிரச்சினைகள் விடயத்தில் 24 மணி நேரத்தில் உயர்நீதிமன்றத்தில் கருத்தை எதிர்பார்ப்பது சரியல்ல என்றும், பொதுமக்கள் சட்டரீதியாக எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை இதன் மூலம் பறிக்கப்படுவதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.
ஆணைக்குழுவின் இந்த அறிக்கையை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தினால், இலங்கையின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து எந்தவொரு அனைத்துலக விசாரணைப் பொறிமுறையும் தேவைப்படாது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


















